ஜூம் நிறுவனத்தில் 1,300 பேருக்கு வேலை போகபோகுது!!
கொரோனா காலத்தில் ஆன்லைன் கிளாஸ்,ஆன்லைன் மீட்டிங், ஆன்லைனில் வேலைக்கான இண்டர்வியூ என எல்லாமே ஜூம் செயலியில்தான் நடைபெற்றது. இந்த நிலையில் கொரோனா குறைந்து தற்போது ஆன்லைன் கிளாஸ்களுக்கான தேவை குறைந்துவிட்டது. இந்த சூழலில் பெரிய பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களே சிக்கன நடவடிக்கையாக ஆட்களை குறைத்து வரும்நிலையில், புதிதாக வந்த ஜூம் நிறுவனமும் அதையே பின்பற்றியுள்ளது குறிப்பிட்ட இந்த நிறுவனத்தின் பங்குகள் கடந்தாண்டு மட்டும் 63%சரிந்துள்ளது. சிக்கன நடவடிக்கையாக ஆயிரத்து 300 பேரை பணிநீக்கம் செய்வதன்மூலம் அந்த நிறுவனத்தின் பணியாளர்கள் 15% குறைகிறது. 2021ல் அமோக வளர்ச்சி கண்ட நிறுவனம், 2022-ல் 38% வருவாய் இழப்பை சந்தித்தது. கொரோனா சூழலில் கணக்கு வழக்கு இல்லாமல் ஆட்களை பணிக்கு எடுத்துவிட்டதாகவும், தற்போது அதற்கான தேவை குறைந்துள்ளதால் ஆட்குறைப்பை செய்வதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆட்குறைப்பு மட்டுமின்றி, மீதம் உள்ள பணியாளர்களுக்கு சம்பள பிடித்தத்தையும் அமல்படுத்தியுள்ளது. செயல்பிரிவில் தலைமைபதவிகளில் இருப்போருக்கு தலா 20% சம்பளம் பிடிக்கப்படுவதாகவும் ஜூம் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூம் நிறுவனமே பணியில் இருந்து நீக்கும் பணியாளர்களுக்கு 16 வார சம்பளம் சிறப்பு தொகையாக அளிக்கப்படுகிறது.