அரசின் அதிரடி முடிவு!!
புகையிலை முதல் ஹோட்டல்கள் வரை வைத்திருக்கும் பிரபல நிறுவனம் ஐடிசி.இந்த நிறுவனம் நிலையான தெளிவான வளர்ச்சியை பங்குச்சந்தையில் செய்து வருகிறது. இந்நிலையில் ஐடிசி நிறுவனத்தின் 7.86%பங்குகளை அரசு தற்போது தன்வசம் வைத்துள்ளது. இந்த பங்குகளை அரசு விற்க முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விற்பனை நடவடிக்கை இந்த நிதியாண்டிலேயே முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சிகரெட் மீது பெரிய அளவில் வரியை மத்திய அரசு விதித்தாலும் அது ஐடிசி நிறுவன வளர்ச்சியை கட்டுப்படுத்தவில்லை. இந்த நிலையில் வேதாந்தா கட்டுப்பாட்டில் உள்ள இந்துஸ்தான் ஜிங்க் நிறுவன பங்குகளைத் தொடர்ந்து தற்போது மத்திய அரசு ஐடிசி நிறுவன பங்குகளையும் விற்க இருக்கிறது. இதன் மூலம் அரசுக்கு 50ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1 வருடத்துக்கு முன்பு 200 ரூபாய் இருந்த ஐடிசி நிறுவன பங்குகள் திங்கட்கிழமை 388 ரூபாயாக உயர்ந்துள்ளது
மொத்த பங்குகளையும் விற்காமல் 2% பங்குகளை விற்றாலும் கூட அரசுக்கு 9ஆயிரத்து 500 கோடி ரூபாய் கட்டாயம் கிடைக்கும் என்கிறது பங்குச்சந்தை வட்டாரங்கள் ஐடிசி நிறுவனத்தில் எல்ஐசியின் பங்கு மட்டும் 15.19 %முதலீடு உள்ளது.மேலும் நேரடி வெளிநாட்டு முதலீடாக 29.18% பங்குகள் ஐடிசியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.