தெரியாம இந்த கார வாங்கித் தொலச்சிட்டேன்..புலம்பும் பிரபலம்..!
சென்னை போன்ற பெரிய நகரங்களில் வசிப்போருக்கு ஹில்டன் ஹோட்டல் பற்றி நன்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த குழும நிறுவனங்கள் நட்சத்திர அந்தஸ்து வாய்ந்தவை, உலகளவில் பல நாடுகளில் இந்த ஹோட்டல்கள் உள்ளன. ஏன் இந்த ஹோட்டல் பற்றி கூறுகிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம்.விஷயம் இருக்கிறது. இந்த குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியாக திகழ்பவர் கிறிஸ் நசெட்டா, 59வயதாகும் இந்த மனிதர் அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது 20 வயதில் போர்ஷே கார் வாங்கியதுதான் தாம் எடுத்த மிகப்பெரிய மோசமான முடிவு என்று தெரிவித்துள்ளார். மாதச்சம்பளம் 17ஆயிரம் டாலராக இருக்கும்போதே, அந்தஸ்துக்காக 20ஆயிரம் டாலர் மதிப்புள்ள போர்ஷே கார் வாங்கியதாகவும், லோன் வாங்கி ஆடம்பர கார் வாங்கியதாகவும், புதிய ஸ்டீரிங் 2ஆயிரம் டாலருக்கு மாற்றியது என பெரிய தொகையை செலவு செய்துவிட்டதாகவும் 18 மாதங்களுக்கு பிறகு தாம் வாங்கிய போர்ஷே காரை பராமரிக்க முடியாமலும், அதற்கு போதிய பணம் இல்லாமலும் விற்றுவிட்டதாக நசெட்டா கூறியுள்ளார். முட்டாள் தனமாக அந்த காருக்கு அத்தனை பெரிய தொகையை செலவு செய்துவிட்டேன் என்றும் தற்போது புலம்பியுள்ளார். ஒரு பொருளுக்கு அடிமையாகிவிடுவது பற்றி வெளிப்படையாக பேசி உலகளவில் பிரபலமடைந்தவர் நசெட்டா. இவர் உலக சுற்றுலா மற்றும் ஹோட்டல்கள் அமைப்பின் தலைவராகவும் இருந்துள்ளார்.