போச்சே..!! போச்சே!!! 100 பில்லியன் டாலர் குளோஸ்!!!
இணையத்தில் தேடுபொறியில் மைக்ரோசாஃப்ட், கூகுள் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் ஆல்ஃபபெட் நிறுவன பங்குகள் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்தது. சரிவுக்கான காரணமாக அண்மையில் கூகுள் அறிமுகப்படுத்திய சாட்பாட் என்ற செயற்கை நுண்ணறிவு நுட்பமே கூறப்படுகிறது.சாட்பாட்டான் சாட் ஜிபிடி உலகளவில் பிரபலமடைந்து வரும் நிலையில், அதற்கு போட்டியாக கூகுள் பார்ட் என்ற பெயரில் புதிய சாட்பாட்டை அறிமுகப்படுத்தியது. பார்ட் செயற்கை நுண்ணறிவு தேடல் தவறான தகவலை சோதனையின்போதே தேடுவோருக்கு அளித்தது. எந்திரன் பட சிட்டி ரோபோவைப் போல உருவாக்கப்பட்டு வந்த பார்ட், ஒரு இடத்தில் தவறான தகவல் அளித்து வசமாக மாட்டிக்கொண்டது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி குறித்து தகவல் தெரிவித்த பார்ட், வேறொரு தொலைநோக்கி எடுத்த படத்தை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்தது என்று கூறியதால் அதனை வடிவமைத்தவர்கள் அதிர்ந்து போயினர். இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பார்ட் என்ற சாட்பாட் தவறான தகவல்களை தருவதால் ஆல்பபெட் நிறுவன பங்குகள் கடந்த அக்டோபர் 26ம் தேதிக்கு பிறகு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.