எல்லாம் மாயா!!!
இந்திய பங்குச்சந்தைகள் பிப்ரவரி 9ம் தேதி லேசான ஏற்றத்துடன் வர்த்தகத்தை முடித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 142 புள்ளிகள் ஏற்றம் கண்டன வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 60 ஆயிரத்து806 புள்ளிகளாக இருந்தது. மும்பை பங்குச்சந்தையை பொருத்தவரை டிரெண்ட், கம்மின்ஸ் இண்ட், டிவி18பிராட்காஸ்ட் உள்ளிட்ட நிறுவன பங்குகள் குறிப்பிடத்தகுந்த ஏற்றத்தை கண்டன. அதானி என்டர்பிரைசர்ஸ்,EKC,MANALI PETc,அம்புஜா சிமெண்ட்ஸ்,RBA உள்ளிட்ட நிறுவன பங்குகள் பெரிய அளவில் சரிவை சந்தித்தன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 21 புள்ளிகள் உயர்ந்தன. வர்த்தக நேர முடிவில் நிஃப்டி17ஆயிரத்து 893 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. தேசியப் பங்குச்சந்தையில் பஜாஜ் பின்சர்வ்,ஹிண்டால்கோ,HDFCLife,ஏசியன் பெயின்ட்ஸ்,இண்டஸ் இண்ட் வங்கி ஆகியவை நல்ல லாபம் பெற்ற நிறுவனங்களாக பதிவாகின. அதானி எண்டர்பிரைசர்ஸ்,அதானி போர்ட்ஸ், ஹீரோமோட்டோ கார்ப்,சிப்லா, ஜேஎஸ்டபிள்யூ உள்ளிட்ட நிறுவனங்கள் பெரிய சரிவை சந்தித்தன. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை மாற்றுவது தொடர்பான அறிவிப்புகளும்,அதானி குழும பங்குகள் சரிந்ததும்இந்திய சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தின. எனினும் குறிப்பிடத்தகுந்த ஏற்றத்துடன்தான் வர்த்தகம் நிறைவடைந்தது.