பாஸ்!!! அதெல்லாம் நிறுத்த முடியாது பாஸ்!!!
ஆப் மற்றும் பிளே ஸ்டோரில் உள்ள முறையற்ற கடன் செயலிகளை நீக்குவது குறித்து பரிசீலிக்க வில்லை என்று ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ராஜேஷ்வர் ராவ் தெரிவித்துள்ளார். எந்தெந்த செயலிகள் மோசமானவை என்று பட்டியில் தயாரித்துள்ள ரிசர்வ் வங்கி அதனை நேரடியாக தடை செய்யாமல், செயலிகள் குறித்த தரவுகளை மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது. சீன தொடர்பு இருக்கும் என்று சந்தேகிக்கப்படும் 138 சூதாட்டம் மற்றும் 94 கடன் செயலிகளை நீக்க மத்திய அரசு ஆணையிட்டுள்ளதால், ஆப் மூலம் கடன் தரும் செயலிகள் துறை அச்சத்தில் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. BNPL,லேசிபே, கிஷ்த், ஃபேர்செண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களும் வாட்ஸ்ஆப்பில் வலம் வருவதாக அந்த நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளன. இவையெல்லாம்தான் முறையான செயலிகள் என்று ஒரு பெரிய பட்டியலை ஆப் ஸ்டோர், மற்றும் பிளே ஸ்டோருக்கு மத்திய அரசு அளித்துள்ளதாகவும், கொரோனா காலகட்டத்தில் முறையற்ற வகையில் கடன் வழங்கிய செயலிகள் அதனை முறையற்ற வகையிலேயே அதிக வட்டி வசூலித்ததால் சில இடங்களில் தற்கொலை சம்பவங்களும் அரங்கேறின. முறையற்ற செயலிகளால் 2 ஆயிரத்து 116 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டதாகவும், அதில் 859 கோடி ரூபாய் மூலம் கடன் அளித்து குற்றத்தில் ஈடுபட்டதும் அடையாளம் காணப்பட்டுள்ளது 289கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் FEMA சட்டத்தின் 37A பிரிவு மூலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் , துணை நிதியமைச்சர் பாக்வத் கராத் தெரிவித்துள்ளார்.