பிரபல செய்தி நிறுவனத்திலும் ஆட்குறைப்பு…
நியூஸ் கார்ப் என்ற நிறுவனம் அமெரிக்காவின் மான்ஹாட்டன் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வருவாய் இழப்பை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் அந்த நிறுவனத்தின் 5% பணியாளர்களை வேலையை விட்டு தூக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது ஆயிரத்து 250 பேருக்கு வேலை போகப்போகிறது. பாக்ஸ் கார்ப் நிறுவனத்துடன் இணைந்ததால் நியூஸ் கார்ப் நிறுவனத்தின் பணம் 6 மில்லியன் டாலர் இழப்பை சந்தித்துள்ளதாகவும் ஏற்கனவே பதவியில் இருந்த ரூபர்ட் முர்டாக் என்பவர் பணியில் இருந்து சென்றுவிட்டதால் இழப்பு மேலும் தொடர்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிகரித்து வரும் விலைவாசி மற்றும் கடன்கள் மீதான வட்டி உயர்வு உள்ளிட்ட காரணிகளால் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆட்குறைப்பு செய்வதால் மட்டும் ஆண்டுக்கு 130மில்லியன் அமெரிக்கட டாலர் இழப்பை சரிசெய்ய முடியும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. அந்த நிறுவன விளம்பர வருவாய் 464 மில்லியன் டாலராக சரிந்துள்ளதும் ஆட்குறைப்புக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.