12 ஆயிரம் ரூபாய்க்கு பிரஷ் ஆர்டர் பண்ணா என்ன கெடச்சது தெரியுமா?
கடைகளில் போய் நேரில் சென்று பேரம் பேசி ஆர்டர் செய்த காலம் மலையேறிவிட்டதால்,போலிகளின் படையெடுப்பு அதிகம் காணப்படுகிறது.ஆர்டர் செய்தது ஒன்று கிடைத்தது வேறொன்று என்ற கதைகள் ஏராளமாக உலா வர ஆரம்பித்துள்ளன. இந்த கதைகளின் தொடர்ச்சியாக பெண் ஒருவரின் தாய் 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஓரல்பி மின்சார பிரஷ்ஷை அமேசானில் ஆர்டர் செய்தார். ஆனால் அவருக்கு டெலிவரி செய்யப்பட்டதோ 4 எம்டிஎச் மசாலா பொருள். கடந்த மாதம் நடந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி பதிவிட்டுள் பாதிக்கப்பட்ட பெண்ணின் மகள், தனது மோசமான அனுபவத்தை கூறியுள்ளார். ஆர்டர் செய்தது ஒரே ஒரு பிரஷ்தான் ஆனால் எப்படி இவ்வளவு கனமாக இருக்கிறது என்று சந்தேகம் எழுந்த நிலையில் கேஷ் ஆண் டெலிவரியில் பொருளை பிரித்துப்பார்த்துதான் பணம் தருவேன் என்று அந்த பெண் சாமர்த்தியமாக ஆர்டர் செய்ததால் நூலிழையில் ஏமாறாமல் தப்பியுள்ளார். அமேசானில் ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக வேறுபொருள் கிடைத்ததை சுட்டிக்காட்டியுள்ள இளம்பெண், குறிப்பிட்ட செல்லர் இன்னும் எப்படி தொடர்கிறார் என்பது வியப்பாக உள்ளதாக கூறியுள்ளார். ஆன்லைனில் புகார் தெரிவித்துள்ள இளம்பெண், தனது மோசமான அனுபவத்தை கூறியதும் அடுத்த சில நிமிடங்களில் ஏராளமானோர் குறிப்பிட்ட செல்லர் கடந்தாண்டு ஜனவரி முதல் இப்படித்தான் செய்து வருகிறார் என்று சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளனர்.