கடன் வழங்கும் செயலிகளை தடை விதிப்பது தேசிய பாதுகாப்பு சார்ந்தது.!!!
லக்னவில் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான கூட்டம் நடைபெற்றது,இதில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு அவர் பதில் அளித்துள்ளார். கடன் வழங்கும் செயலிகளை வழங்குவதா தடை செய்வதா என்பது தேசிய பாதுகாப்பு சார்ந்தது என்றுமட்டும் கூறிய அவர், வேறு எதுவும் கருத்து கூற முடியாது என்றார். 94 டிஜிட்டல் செயலிகளை, திடீரென 69ஏ பிரிவினை பயன்படுத்தி நீக்கியதால் சில நிறுவனங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டன. சீன அரசுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில் 94 செயலிகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட கடன் வழங்கும் செயலிகளின் நிறுவனங்கள் தங்கள் தரப்பு வாதத்தை மத்திய அரசிடம் முன்வைத்தன. பாதுகாப்பு கருதி சில செயலிகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது புரியாமல் செயலிகள் மூலம் பணம் வழங்குவோர் குழப்பத்தில் உள்ளனர்.