ஆமாங்க நாங்க கூட பணம் தந்திருக்கோம்: டிபிஎஸ் வங்கி!!!
ஹிண்டன்பர்க் அறிக்கையால் பெரிய பாதிப்பை சந்தித்துள்ள அதானி குழுமம், பல வங்கிகளிடம் இருந்து கடன் வாங்கியுள்ளதால் அத்தனை வங்கிகளும் தங்கள் வங்கி எவ்வளவு தந்தது என்று அண்மையில் வெளியிட்டனர்.
இந்த நிலையில் சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிபிஎஸ் வங்கி,அதானி குழும வணிகத்துக்காக 976 மில்லியன் டாலர் கடன் தந்துள்ளதாக கூறியுள்ளது. ஒரு பில்லியன் சிங்கப்பூர் டாலர் சிமெண்ட் நிறுவனத்துக்கும், மீதமுள்ள 300 மில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் அதானி குழுமத்தின் பிற நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. பெரிய தொகையை அதானி குழுமத்திற்கு அளித்துள்ளபோதும், அதானி குழுமத்தின் பணப்புழக்கம் சீராக உள்ளதால், பணம் திரும்ப கிடைக்காதோ என்ற அச்சம் தேவைப்படவில்லை என்றும் டிபிஎஸ் குரூப்பின் தலைமை செயல் அதிகாரி பியூஷ் குப்தா தெரிவித்துள்ளார். அதானி குழுமத்தின் பல நிறுவனங்களும் வங்கிகளிடம் சீராக பணத்தை செலுத்தியும் கடன்களை பெற்றும் வருவதாக பியூஷ் குப்தா தெரிவித்துள்ளார். இதற்கு உதாரணமாக 10.5 பில்லியன் டாலர் மதிப்பில் ஹோலிகாம் நிறுவனத்தின் சிமெண்ட் கையாளும் பிரிவு பணப்புழக்கம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அண்மையில் லக்ஷ்மி விலாஸ் வங்கியை வாங்கிய டிபிஎஸ் வங்கி தனது வங்கிப்பரிவர்த்தனைகள் மற்றும் வணிகத்தை இந்தியாவில் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.