அம்புட்டு காரும் வித்து தீந்துருச்சி!!!
2022ம் ஆண்டு சொகுசுகார்களின் விற்பனையின் சொர்க்கம் என்றுதான் சொல்ல வேண்டும். கடந்தாண்டில் லம்போர்கினி,போர்ஷே,மெர்சிடீஸ் பென்ஸ் உள்ளிட்ட கார்கள் விற்பனை இந்தியாவில் சாதனை அளவாக பதிவாகியுள்ளது
வரும் ஆண்டுகளில் இந்த கார்களின் விற்பனை பலமடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சொகுசு காரான லம்போர்கினி இந்தியாவில் விற்றுத்தீர்ந்துவிட்டது. இத்தாலியைச் சேர்ந்த லம்போர்கினி காரின் அடிப்படை விலையே 3கோடிய15 லட்சம் ரூபாயாகும். மிகவும் சொகுசான காராக அந்நிறுவனத்தின் அவென்டேடார் கார் 9 கோடி ரூபாயாக உள்ளது. இந்த நிறுவனம் இந்தாண்டு இந்தியாவில் 100க்கும் மேற்பட்ட கார்களை விற்க திட்டமிட்டுள்ளது.இந்தாண்டுக்கான லம்போர்கினி கார்கள் ஏற்கனவே ஆர்டர் செய்து முடிக்கப்பட்டுவிட்டது. இந்தாண்டுக்கான ஆர்டர் ஏற்கனவே முடிந்துவிட்டதாகவும் அனைத்து கார்களையும் இந்தாண்டு வரிசைப்படி டெலிவரி செய்வது மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா பெருந்தொற்று மெல்ல மெல்ல காணாமல் போனதால் சொகுசு கார்களின் ஆர்டர் அதிகம் குவிந்துள்ளதாகவும், பணக்காரர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு மட்டும் இந்த கார்கள் இந்தியாவில் 90 கார்கள் விற்கப்பட்டுள்ளன.இது கடந்தாண்டைவிட 30%அதிகமாகும் சீனாவிலும் லம்போர்கினி கார் விற்பனை ஆயிரத்தை கடந்தாண்டு கடந்துள்ளது. இதேபோல் ஆடி கார்களின் விலையும் அதிகம் என்றபோதிலும் இந்தியாவில் இந்த காருக்கான மவுசு கொஞ்சமும் குறைந்தபாடில்லை. போர்ஷே கார்கள் இந்தியாவில் விற்பனை 64% உயர்ந்துள்ளது. போர்ஷே கார்கள் இந்தியாவில் அதிகம் விற்பனையானதில் கடந்தாண்டு சிறந்தாண்டு என்று போர்ஷே நிறுவனம் அண்மையில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.