ஒரு வேலை தப்பு நடந்திருக்குமோ- ஐயா இது என்னனு கொஞ்சம் பாருங்க..
மோசடிக்காரர் அதானி என்று ஒரே ஒரு அறிக்கை என்ற ஊசிவெடியை தூக்கிப்போட்டுவிட்டு அதானியின் சாம்ராஜ்ஜியத்தையே ஹிண்டன்பர்க் நிறுவனம் சரியவைத்துள்ளது. இந்த நிலையில் குற்றச்சாட்டுகளை துவக்கத்தில் இருந்து மறுத்து வரும் அதானி தற்போது உலகின் தலைசிறந்த,அதக சம்பளம் கேட்கும் வக்கீலை வைத்து அமெரிக்காவில் நீதிமன்றத்தை நாடியுள்ளதும், அதன்பிறகு தற்போது பிரபல ஆடிட் நிறுவனத்தையும் நாடியுள்ளார். grant thornton என்ற நிறுவனத்தை அதானி குழுமம் ஆடிட்டிங் செய்ய அனுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசும் செபி அமைப்பும் உச்சநீதிமன்ற ஆணைப்படி அதானி குழும பாதிப்புகள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சூழலி்ல் பிரபல நிறுவனத்தை அதானி குழுமம் களமிறக்கியுள்ளது. அதானி குழுமத்தின் பாதிப்புகளால் இந்திய பங்குச்சந்தைகள் பெரிய பாதிப்பை சந்திக்க வில்லை என்று கூறியுள்ள செபி, இந்திய பங்குச்சந்தைகள் உறுதியாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.