இது என்னடா அமேசானுக்கு வந்த சோதன…
கோடிக்கணக்கான பொருட்களை விற்று வரும் மின் வணிக நிறுவனமான அமேசானின் விற்பனை உலகளவில் கடுமையாக சரிந்துள்ளது. மேலும் பல்வேறு பொருட்களின் விலைகளும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் விற்பனையாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் பொருட்களின் அளவை அமேசான் பாதியாக குறைத்துள்ளது. அந்த நிறுவனம் துவங்கப்பட்டதில் இருந்தே இதுவரை சந்தித்து இல்லாத பாதிப்புகளை கடந்தாண்டு அமேசான் நிறுவனம் சந்தித்தது.அதாவது 50%க்கும் அதிகமாக சரிவு காணப்பட்டுள்ளது 2016ம் ஆண்டு முதல் தற்போது வரை அந்த நிறுவனம் எவ்வளவு பொருட்களை விற்பனைக்கும், சந்தைக்கும் எடுத்துவருகிறது என்று மார்க்கெட் பிளேஸ் பல்ஸ் என்ற நிறுவனம் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. லாஜிஸ்டிக்ஸ் மற்றும் விளம்பரங்களையும் அமேசான் குறைத்துக் கொண்டுள்ள நிலையில், அது வணிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தொழிலில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக விளம்பரம் பார்க்கப்படும் நிலையில் அதனை அமேசான் குறைத்துக்கொண்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவுக்கு பிறகு ஆன்லைனில் பொருட்கள் வாங்குவோரின் நடவடிக்கை கடுமையாக மாறிப்போனதே அமேசானின் இந்த திடீர் வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது. பல வணிகர்கள் தற்போது அமேசான் வலைதளத்தில் பொருட்களை விற்று பணமாக்குவதில் தடுமாறி வருவதாகவும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. சிறு நிறுவனங்களின் வருவாய் கடுமையாக சரிந்துள்ளதாக வணிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். விளம்பரங்களில் செலவு செய்வதை விட்டுவிட்டு தள்ளுபடி அதிகரித்தால் அமேசான் மீண்டும் லாபகரமாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால் அமேசான் இதனை பரிசீலிக்குமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.