விதவிதமாக கம்பி கட்டும் கவுதம் அதானி!!!
ஹிண்டன்பர்க் அறிக்கையால் பெரிய தொகையை இழந்த கவுதம் அதானியின் பங்குகள் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றன. இந்த நிலையில் பங்குச்சந்தையில் நிலவும் நிலையற்ற சூழல் தற்காலிகமானது என்று கவுதம் அதானி காதலர் தினத்தில் பேசியுள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு காலாண்டிலும் அதானி குழுமம் வலுவான நிலையில் இருந்து வருவதாகவும் கூறியுள்ளார். அதானி என்டர்பிரைசர்ஸ் நிறுவனம் கடந்தாண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை 820 கோடி ரூபாய் லாபத்தை பதிவு செய்துள்ளதாகவும் கவுதம் அதானி தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் வருவாய் 42 % அதிகரித்து 26 ஆயிரத்து 612 கோடி ரூபாயாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நிலையான நிர்வாகத்தால் அதானி குழுமம் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளதாக அதானி தெரிவித்துள்ளார். அதானி குழும நிறுவனங்கள் கடந்த ஜனவரி 24 முதல் இதுவரை 10லட்சத்து2 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. அதானி என்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தின் 2022 3-ம் காலாண்டு முடிவுகள் வெளியான சில நிமிடங்களில் அந்நிறுவன பங்குகள் உச்சம் பெற்றன.