பங்காளி நாட்டில் கேசுக்கு ஏறிப்போச்சு காசு..!!
நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தானில் இயற்கை எரிவாயு எனப்படும் கேஸ் விலை கிட்டத்தட்ட இரண்டுமடங்காக உயர்ந்துள்ளது. கடுமையான சிக்கலில் உள்ள பாகிஸ்தானில் 6 பில்லியன் அமெரிக்க டாலர்களை தர சர்வதேச நாணய நிதியம் பல்வேறு கட்ட அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,இயற்கை எரிவாயு மீதான வரி 16 விழுக்காட்டில் இருந்து ஒரே நாளில் 112% ஆக உயர்ந்துள்ளது. அண்மையில் தான் அந்த நாட்டில் மின்சாரத்தின் மீதான வரிகள் கடுமையாக உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவிப்பு இந்த வாரத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எங்கள் வருமானம் உயரவே இல்லை என்று புலம்புகின்றனர் அந்நாட்டு மக்கள். இப்படியே விலைவாசி உயர்ந்துகொண்டே சென்றால் என்ன செய்வது எனறு பலரும் புரியாமல் உள்ளனர். கடந்தாண்டு வறட்சிகாலத்தில் ஏற்பட்ட திடீர் மழை மற்றும் வெள்ளத்தால் கடும் பாதிப்பு காணப்பட்டது. அப்போது விழந்த அந்நாட்டு பொருளாதாரம் கடுமையான பாதிப்புகளை சந்தித்து சிக்கலில் தவிக்கிறது. பாகிஸ்தானின் நிதிச்சுமை பற்றி அஷ்பாக் அக்மது என்ற பொருளாதார நிபுணர் பலமுறை எச்சரித்தும் பாகிஸ்தான் அதனை கண்டுகொள்ளவே இல்லை. இதன் விளைவை தற்போது அந்நாட்டு அரசு அனுபவித்து வருகிறது. பாகிஸ்தானின் வெளிநாட்டு நிதி கையிருப்பு வெறும் 3 பில்லியன் டாலருக்கும் குறைவாக குறைந்துள்ளது. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆட்சி செய்த காலகட்டத்தில் விலைவாசி கண்டபடி உயர்ந்துள்ளதாக லாகூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கூறுகிறார். பாகிஸ்தானின் 21% மக்கள் தொகையினர் வறுமையில் உள்ளனர். அந்நாட்டில் 10% மக்கள் மட்டுமே செல்வந்தர்களாக உள்ளனர்.