ஆப்பிளிலும் தொடங்கியாச்சா ஆட்குறைப்பு!!
அமெரிக்கா மட்டுமின்றி உலகளவில் நிலவும் நிலையற்ற பொருளாதார சூழல், பணவீக்கம் உற்பத்தி பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் பெரிய பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றனர். இந்த வரிசையில் ஆட்குறைப்பு பற்றி பேசாமல் இருந்த ஒரே பெரிய நிறுவனமானக ஆப்பிள் நிறுவனம் இருந்தது. ஆனால் தற்போது அவர்களும் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன நேரடியாக பணியாளர்களை ஆட்குறைப்பு செய்யாத அந்நிறுவனம்3-ம் தர்ப்பு ஒப்பந்தங்கள் ஒப்பந்ததாரர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தெரிவித்துளளது. பணத்தை மிச்சப்படுத்த இத்தகைய அறிவிப்புகளை ஆப்பிள் செய்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்து. எத்தனை பேருக்கு வேலை போகப்போகிறது என்ற தரவுகள் கிடைக்கப்படவில்லை. எனினும் சில ஆயிரங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் கொரோனா காலகட்டமாக அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் இருந்தபோது,ஆப்பிள் செல்போன்கள் உற்பத்தி குறைந்தது. 2021ம் ஆண்டை விட 2022ம்ஆண்டு அதிகப்படியான பணியாளர்களை ஆப்பிள் பணியமர்த்தியுள்ளது. இதனால் அவர்களுக்கு சம்பளமாக அதிகப்பட்ச தொகை செலுத்தப்படுகிறது. இந்த நிலையில் நேரடி பணியாளர்களுக்கு சம்பளத்தை குறைக்காமலும், பனிப்பாதுகாப்புக்கு உறுதி அளிக்கும் வகையிலும் ஒப்பந்ததாரர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பவில்லை என்றும் ஆப்பிள் தெரிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை சங்கிலி உலகளவில் சரிவை சந்தித்த அடிப்படையில் ஒப்பந்ததாரகள் கணக்கை குறைக்க ஆப்பிள் தீவிரம் காட்டி வருகிறது.