யூடியூப் நிறுவனத்திற்கு புதிய தலைமை!!!
யூடியூப் நிறுவனத்தின் புதிய தலைமைசெயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீல் மோகன் தேர்வாகியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தலைமை பதவியில் இருந்த சூசன் வோஜ்சிச்கி சொந்த காரணங்களுக்காக பதவி விலகியுள்ளார். இதனையடுத்து அவருக்கு அடுத்த பதவியில் இருந்த நீல் மோகனின் பெயர் பரிசீலிக்கப்பட்டுள்ளது. யூடியூப் நிறுவனத்தின் மூத்த அதிகாரியாக இருந்த சூசன் கூகுளுடன் 25 ஆண்டுகள் தொடர்பில் இருந்தவராவார். இந்திய பூர்விகம் கொண்ட நீல் மோகன் யூடியூபின் மூத்த தயாரிப்பு அதிகாரியாக இருந்து தற்போது உலகின் பெரிய வீடியோ தேடுபொறியின் தலைமை பதவிக்கு முன்னேறியுள்ளார். உலகளவில் தொழில்நுட்ப உலகை இந்தியர்கள் கட்டி ஆண்டு வரும் சூழலில், அந்த வைரத்தின் மேலும் ஒரு வைரமாக நீல் அலங்கரித்துள்ளார். பதவி விலகும் சூசன் உருக்கமான கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில் தனது சொந்த குடும்ப சூழல் காரணமாக தாம் இத்தனை ஆண்டுகள் பயணித்த யூடியூப் நிறுவனத்தை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் நீல் மோகன் முழுமையாக பதவியை ஏற்கும் வரை சூசனும் யூடியூப் நிறுவனத்தில் தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.