கூகுள் இந்தியாவில் 453 பேருக்கு வேலை போயிடுச்சி!!!
அமெரிக்காவில் நிலவும் பொருளாதார சூழல் காரணமாக பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை ஆட்குறைப்பு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கூகுள் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோரை வேலையை விட்டு தூக்கியது. அனைத்து துறையிலும் இந்த ஆட்குறைப்பு நடத்தப்பட்டது. இந்தியாவில் பணியாற்றும் கூகுள் நிறுவன பணியாளர்கள் 453 பேரின் வேலையும் தற்போது நீக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் போலவே சிங்கப்பூரிலும் 190 பேரின் வேலையை அந்நிறுவனம் ரத்து செய்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் கூகுள் வரலாற்றில் முதன் முறையாக 12 ஆயிரம் பேரின் வேலை ரத்து செய்யப்பட்டது.மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 10ஆயிரம் பேரையும்,அமேசான் 18 ஆயிரம் பேரையும்,மெட்டா நிறுவனம் 11ஆயிரம் பேரையும் பணிநீக்கம் செய்துள்ளனர். ஸ்விட்சர்லாந்தில் 250 கூகுள் பணியாளர்கள் திடீரென வேலையை விட்டு நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு ஊழியர்கள் முழக்கங்களை எழுப்பினர். திடீர் பணிநீக்கத்தை எதிர்த்து அமெரிக்காவி்ன் கலிஃபோர்னியா மற்றும் நியூயார்க்கிலும் போராட்டங்கள் நடைபெற்றன.