எதிரி நாட்டு தளவாடங்களை கிடைத்த விலைக்கு விற்ற இந்தியா!!!
1962 மற்றும் 1965-ல் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான போருக்கு பிறகு இங்கு வசித்தவர்கள் இந்தியாவிலேயே விட்டுச்சென்ற தங்கம் மற்றும் அசையும் சொத்துக்களை இந்தியா 3 ஆயிரத்து 400 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது. சரியாக சொல்லவேண்டுமானால் 3ஆயிரத்து 407 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை பங்குகளாகவும், சில நிறுவனங்களின் வருவாயாகவும் 699கோடி ரூபாய் அரசுக்கு கிடைத்துள்ளது. 1699.79 கிலோ தங்கத்தையும்,28ஆயிரத்து896 கிலோ வெள்ளியையும் கடந்த 2021ம் ஆண்டே இந்திய அரசு விற்றுள்ளது. எதிரி நாட்டுப்படையினரின் அசையா சொத்துகளை இந்தியா இதுவரை இன்னும் பணமாக மாற்றவில்லை. மொத்தம் 12ஆயிரத்து611 சொத்துகளில் பாகிஸ்தானியர்களின் சொத்துகளும், 126 சீனர்களுக்கு சொந்தமாகவும் இருந்ததாக அரசு கூறியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் 67 பேரின் சொத்துகளும் உள்ளன. உத்தரபிரதேசத்தில் மட்டும் எதிரிகளின் சொத்துகள் 6 ஆயிரத்து 255 சொத்துகள் உள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.