அதானியை காப்பியடிக்கிறதா ஜாய் ஆலுக்காஸ்?
இந்திய அளவில் பிரபல நகைக்கடையாக இருக்கிறது ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம். தென்னிந்தியாவில் பிரபல நடிகர்கள் அனைவரும் கிட்டத்தட்ட இந்த நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க வைக்க தீவிர முயற்சி நடைபெற்றது. இந்த நிலையில் குறிப்பிட்ட நகைக்கடை பொது வெளியீடு மூலம் 2ஆயிரத்து 300 கோடி நிதி திரட்ட திட்டமிட்டது.இதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் திடீரென ஐபிஓ திட்டத்தை ஜாய் ஆலுக்காஸ் நிறுத்தி வைத்துள்ளது. சந்தையில் நிலவும் நிலையற்ற சூழலை அதானி குழுமம் காரணம் காட்டிய அதே காரணத்தை ஜாய் ஆலுக்காஸும் கூறியுள்ளது. முதன்மையான பங்குச்சந்தை மிகவும் வறட்சியாக இருப்பதாலேயே நகை நிறுவனம் இந்த முடிவை எடுத்திருக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த டிசம்பரில் ஸ்னாப்டீல் நிறுவனம் 152 மில்லியன் நிதி திரட்ட திட்டமிட்டு அதனை கடைசி நேரத்தில் பின்வாங்கியது. கேரளாவை தலைமை இடமாக கொண்டு களமிறங்கியுள்ள ஜாய் ஆலுக்காஸுக்கு நாடு முழுவதும் 68 நகரங்களில் கிளைகள் உள்ளன. உலகிலேயே இரண்டாவது பெரிய தங்க சந்தையாக திகழும் இந்தியாவில் கடந்த மாதம் தங்கம் விலை உயர்ந்ததால் வழக்கமான விற்பனையை விட 3%விற்பனை சரிந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.