அமெரிக்காவைத் தொடர்ந்து சீனாவிலும் தொடங்கியது பணிநீக்கம்!!!
சீனாவில் செல்போன்களுக்கான உபகரணங்களை தயாரிப்பதில் முன்னோடி நிறுவனமாக திகழ்கிறது ZTE. இந்த நிறுவனம் அண்மையில் அனைத்து துறைகளிலும் பணியாளர்களின் ஒரு சில பகுதியை நீக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக 10 முதல் 20% பணியாளர்களை பணிநீக்கம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதே நிறுவனத்தில் பணியாற்றியவர்களை வேலையில் இருந்து தூக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த வருடம் குறிப்பிட்ட இந்த நிறுவனத்தில் அளவுக்கு அதிகமானோரை வேலைக்கு சேர்த்துக்கொண்டதால் பழைய பணியாளர்களை அந்நிறுவனம் வீட்டுக்கு அனுப்பி வருகிறது. கடந்தாண்டில் குறிப்பிட்ட இந்த நிறுவனத்தின் வருமானம் மட்டும் 6.82 பில்லியன் யுவானாக உள்ளது. நிறுவனம் லாபத்தில் இயங்கும்போதும் இப்படி ஆட்குறைப்பு செய்வதால் அந்நிறுவன பணியாளர்கள் கலக்கத்தில் உள்ளனர் உலகின் பல நாடுகளிலும் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். லிங்கிடு இன் நிறுவனம் அதன் ஊழியர்களை நீக்கி வருகிறது, மேலும் ஆப்பிள் நிறுவனம் மட்டுமே இதுவரை நேரடியாக அதன் ஊழியர்களை இதுவரை நீக்காமல் உள்ளது..எனினும் அதன் ஒப்பந்த ஊழியர்களை சப்தமில்லாமல் நீக்கி வருகிறது.