இனி பாக்கி ஏதும் இல்லையாமே…!!
49வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய நிதித்துறை இமையமைச்சர் பங்கஜ் சவுத்ரியும் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் நாட்டின் முக்கிய பிரச்னைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. மாநிலங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய நிலுவை செஸ் வரியை கடந்தாண்டு ஜூன் மாதத்தில் இருந்து உடனடியாக அனுப்பி வைப்பதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகளாக மாநிலங்களுக்கு அளிக்கப்படவேண்டிய பாக்கி தொகை முழுமையாக அளிக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார். இந்த தொகை மட்டும் 16ஆயிரத்து982 கோடி ரூபாயும்,கூடுதலாக 6 மாநிலங்களுக்கு 16ஆயிரத்து 524 கோடி ரூபாய் 6 மாநிலங்களுக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு ஜிஎஸ்டி வரி வசூலிப்பது குறித்து பிரச்னைகள் எழுந்தால் அதற்கான தீர்ப்பாயம் அமைப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பான் மசாலா, குட்கா பொருட்கள் மீதான செஸ் வரி தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாகவும்,தீர்க்கப்படவேண்டிய பிரச்னைகள் ஆயிரக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார். பென்சில் மற்றும் ஷார்ப்னர் மீதான ஜிஎஸ்டி வரியை குறைப்பது பற்றியும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.