இந்தியாகாரங்க மாசாமாசம் எம்புட்டு செலவு பண்றாங்க தெரியுமா?
இந்தியர்கள் தங்கள் பணத்தை எப்படி எந்த நாட்டில் செலவு செய்துள்ளனர் என்ற பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.அதன்படி 1பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியர்கள் மாதாமாதம் வெளிநாடுகளில் செலவு செய்கின்றனர் என்கிறது அந்த அறிக்கை. 2022 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை சராசரியாக 9.95பில்லியன் டாலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2021-22 ஏப்ரல் முதல் டிசம்பரில் காலகட்டத்தில் 4.16 பில்லியன் டாலராகவும், கொரோனாவுக்கு முன்பு 2019-20-ல் 5.4 பில்லியன் டாலராக இருந்ததாகவும் ரிசர்வ் வங்கி கூறுகிறது.2021-22-ல் முழு நிதியாண்டில் 7பில்லியன் டாலர் இந்தியர்கள் செலவு செய்துள்ளதாகவும் அந்த வங்கி கூறியுள்ளது. வியட்நாம்,தாய்லாந்து,ஐரோப்பா, பாலி ஆகிய நாடுகளுக்குத்தான் இந்தியர்கள் அவர்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் செல்ல விரும்புவதாக வீ 3 ஆன்லைன் நிறுவனம் கூறியுள்ளது. எளிதாக பயணிக்க அதிக வசதி வாய்ப்புகள் உள்ளதால் சுற்றுலா தொழில் வேகமாக வளர்வதாகவும் தனியார் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா காலத்தில் சரிந்திந்த இந்தியர்களின் பணம் செலவிடும் வசதி தற்போது கொரோனாவுக்கு முன்பு இருந்ததை விடவும் சிறப்பாக உள்ளதாக ரிசர்வ் வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.