மின்சார வாகனங்களுக்கு எவ்வளவு வரி?
பெட்ரோல்,டீசலில் இயங்கும் எஸ்யுவிகளுக்குத்தான் மாறுபட்ட வரிவிதிப்பு உள்ளது. ஆனால் மின்சார கார்கள்,அது சிறியதோ பெரியதோ,அனைத்துக்கும் 5%வரிதான். பெட்ரோல் மற்றும் மின்சாரம் என இருவகைகளிலும் இயங்கும் வகை கார்களுக்கு 28%ஜிஎஸ்டி மட்டுமே கூடுதல் செஸ் கிடையாது, ஆனால் பெரிய ஹைப்ரிட் கார்களான மாருதி கிராண்ட் விடாராவுக்கு 15% செஸ் கூடுதலாக விதிக்கப்படுகிறது. என்னதான் அவிங்களுக்கு தேவை? MUV எனப்படும் பல பயன்பாட்டு வாகனங்களுக்கு குறைவான வரி விதிக்கப்படுவது நீக்கப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தும் எரிபொருள் வாகனங்களுக்கு அதிக வரியையும், சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படாத மின்சார வாகனங்களுக்கு இன்னும் அதிக சலுகைகள் தரலாம் என்பது கார் உற்பத்தியாளர்கள் கருத்தாக உள்ளது