5 கூட்டுறவு வங்கிகளுக்கு கட்டுப்பாடு விதித்த மத்திய வங்கி
இந்தியாவில் கூட்டுறவு வங்கிகள் உதவியால் நடுத்தர மக்கள் பெரிதும் பலனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் 5 கூட்டுறவு வங்கிகளில் போதிய பணப்புழக்கம் இல்லாததாக புகார் எழுந்ததை அடுத்து அவற்றிற்கு கட்டுப்பாடுகள் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.இந்த கட்டுப்பாடுகள் 6 மாதங்களுக்கு செல்லும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள HCBL Co-operative Bank, மகாராஷ்டிராவில் உள்ள Adarsh Mahila Nagari Sahakari Bank Maryadit, கர்நாடகத்தில் உள்ள Shimsha Sahakara Bank Niyamitha ஆகிய கூட்டுறவு வங்கிகள் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் ஆந்திராவில் உள்ள Uravakonda Co-operative Town Bank, மகாராஷ்டிராவில் உள்ள Shankarrao Mohite Patil Sahakari Bank ஆகிய வங்கிகளின் வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும். குறிப்பிட்ட இந்த 5 வங்கிகளில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு கிடைக்கும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.