இது என்னய்யா தடாலடி காம்பினேஷனா இருக்கு…
இந்திய தொழில் அதிபர்களில் ஒருவரான சுனில் மிட்டல் இந்திய நிதிசார்ந்த செயலியான பேடிஎம் நிறுவனத்தின் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஒரே நேரத்தில் ஏர்டெல் பேமண்ட்ஸ்பேங்க் பங்குகளை பேடிஎம் உடன் இணைக்க மிட்டல் முயற்சி மேற்கொண்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்தாண்டு நவம்பரில் மிகவும் கீழே சரிந்து கிடந்த பேடிஎம் நிறுவன பங்குகள்,தற்போது கிட்டத்தட்ட 40%விலையேற்றம் கண்டுள்ளன.அதிகப்படியான வாடிக்கையாளர்களையும் பேடிஎம் ஈர்த்து வருவதால் அந்நிறுவனம் சந்தித்திருந்த நஷ்டம் விரைவில் சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேடிஎம் நிறுவனம் அதன் ஐபிஓவில் கூறப்பட்ட தொகையைவிட அதிகம் விற்கப்பட்டதே இல்லை. இந்த சூழலில் 13 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ள மிட்டலின் ஏர்டெல் நிறுவனம் லாபத்தை ஈட்டுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. துவக்கத்தில் வேகமாக வளர்ந்து வந்த பேடிஎம் நிறுவனம் கடந்தாண்டு சரிந்து மீண்டும் வளர்ச்சிப்பாதையில் பயணித்து வருவதால் ஏராளமான தரகர்கள் பேடிஎம்பக்கம் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர்