விழுந்தது எந்திரிக்கவே இல்ல..
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிந்து வருவது முதலீட்டாளர்களை கலங்க வைத்துள்ளது. வாரத்தின் கடைசி வர்த்தக நாளான பிப்ரவரி 24ம்தேதி இந்திய பங்குச்சந்தைகள் கடுமையாக விழுந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 141 புள்ளிகள் சரிந்து,59 ஆயிரத்து463புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 45 புள்ளிகள் குறைந்து 17,465 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. முதல் இரண்டு மணி நேரம் வடிவேலு சொல்வதைப்போல நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சி..பின்னர் விழுந்த பங்குகள் எழவே இல்லை. நண்பகலில் லாபத்தை பதிவு செய்ய விரும்பிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றதால் சந்தையில் சரிவு காணப்பட்டது. Adani Enterprises, Hindalco Industries, M&M, JSW Steel,Tata Steel உள்ளிட்ட நிறுவனங்கள் பெரிய அளவில் இழப்பை சந்தித்தன.Divi’s Laboratories, Adani Ports, Asian Paints, Coal India and Dr Reddy’s Laboratoriesஆகிய நிறுவனங்கள் லாபத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தையில் உலோகத்துறை பங்குகள் 2.4% சரிவை சந்தித்தன. தங்கத்தின் விலையும் தொடர்ந்து 3வது நாளாக சரிவிலேயே முடிந்துள்ளன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை 41 ஆயிரத்து 880 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இது நேற்றைய விலையை விட சவரனுக்கு 80 ரூபாய் குறைவாகும். ஒரு கிராம் தங்கத்தின் விலை 10 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 235 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து 70 ரூபாய் 90 காசுகளாக விற்பனை செய்யப்பட்டது.கட்டிவெள்ளி ஒரு கிலோ 600 ரூபாய் விலை குறைந்து 70ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்கப்பட்டது.கடந்த சில மாதங்களாக 44 ஆயிரம் ரூபாய் வரை ஆட்டம் போட்ட தங்கம் தற்போது 42 ஆயிரம் என்ற அளவில் விற்கப்படுவதால் விரைவில் இன்னும் கூட விலை குறையுமா என்று மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.(இங்கே கூறப்பட்டுள்ள விலை 3% ஜிஎஸ்டி இல்லாத விலையாகும் என்பதை நினைவில் கொள்க).