முதல் முறையாக அடிப்படை விலையை விட கீழே சரிந்த பங்கு, அது என்ன பங்கு?
அதானி குழுமத்தில் 5 பெரிய நிறுவனங்களில் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி தனது முதலீடுகளை இறக்கியுள்ளது.பெரிய அளவு பணம் குறிப்பிட்ட 5 நிறுவனங்களில் இருந்தாலும், அது பாதிக்கப்படவில்லை என்று அண்மையில் எல்ஐசி விளக்கம் அளித்திருந்தது. இந்த நிலையில் ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து இந்திய உச்சநீதிமன்றம்,முறைகேடு குறித்து விசாரிக்க அழுத்தம் தருவதால் அதானி குழும பங்குகள் சரிவில் இருந்து மீள முடியாத நிலையிலேயே உள்ளது. நிலைமை இப்படி இருக்க, அதானி குழுமத்தில் எல்ஐசி நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு 26ஆயிரத்து861 கோடி ரூபாயாக சரிந்துள்ளது. இது 11விழுக்காடு அடிப்படை வாங்கும் விலையை விடவும் குறைவாகும். அதாவது 30,127 கோடி ரூபாயாக இருந்த சந்தை மதிப்பு தற்போது 26,861 கோடியாக சரிந்துள்ளது. டிசம்பர் 2022 வரையில் கடந்த 9 காலாண்டுகளாக அதானி குழும பங்குகளில் பெருமளவு எல்ஐசி வாங்கிக் குவித்திருந்தது.சந்தை மூலதனமாக அதானி குழுமத்தின் மூலதனம் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாவதற்கு முன்பு 19.18லட்சம் கோடியாக இருந்தது. இது பிப்ரவரி 23ம் தேதி நிலவரப்படி 7லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாயாக வீழ்ந்துவிட்டது. பங்குச்சந்தையில் நிலவும் இந்த சரிவால் கவுதம் அதானியின் சொத்துமதிப்பு கணிசமாக சரிந்துவிட்டது. உலகிலேயே 3வது பெரிய பணக்காரராக வலம் வந்த கவுதம் அதானியின் சொத்துமதிப்பு கடகடவென சரிந்து தற்போது அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 26வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.