பேடிஎம்மில் இருந்து படிப்படியாக விலகும் ஜாக்மா..!!!
உலக பணக்காரர்களில் ஒருவரான ஜாக்மா தனது ஆன்ட்குழுமத்தின் பங்குகளை மெல்ல மெல்ல பேடிஎம் நிறுவனத்தில் இருந்து விலக்கிக் கொள்ள ஆயத்தமாகி வருகிறார்.உலகளவில் அதிகரித்து வரும் பல்வேறு சிக்கல்களை அடுத்து அலிபாபாவின் இந்த நிறுவனம் பேடிஎம்மில் இருந்து வெளியேறுகிறது. பேடிஎம்மின் தாய் நிறுவனமான one97நிறுவனத்தில் ஆண்ட் நிறுவன பங்குகள் 24.86% உள்ளன. ஏர்டெல் நிறுவன பங்குகளையும் பேடிஎம் நிறுவன பங்குகளையும் இணைக் சுனில் மிட்டல் தீவிரம் காட்டி வரும் சூழலில் சீன நிறுவனமான ஆண்ட் நிறுவனம் படிப்படியாக விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்ட் நிறுவனம் ஆசியாவில் 10 நிதிசார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் பெரிய தொகையை முதலீடு செய்து தனது சேவைகளை விரிவு படுத்த திட்டமிட்டது.இந்தியாவில் இருந்து வெளியேற தயாராகும் ஆண்ட் நிறுவனம் சீனாவிலேயே இன்னும் பெரியதாக கிளையை விரிக்க திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.