அடையாளமா இருந்த போர்டை தூக்கிய பழைய பெரிய வங்கி…
சிட்டி வங்கி ஆங்கிலேயர் காலத்தில் இருந்து இந்தியாவில் உள்ளது. கொல்கத்தாவில் உள்ள சவ்ரிங்கி சாலையில் கனக் பில்டிங் என்ற கட்டிடத்தில் இந்த வங்கி 1902ம் ஆண்டு தனது சேவையை இந்தியாவில் தொடங்கியது. கடந்த 2021ம் ஆண்டு சிட்டி குழும வாடிக்கையாளர்களின் வங்கி பிரிவு சேவைகளை ஆக்சிஸ் வங்கி வாங்கியது. இந்த புதிய சேவைகளை ஆக்சிஸ் வங்கி வரும் 1ம் தேதியில் இருந்து துவங்க இருக்கிறது. இதற்காக கனக் பில்டிங்கில் இருந்த வரலாற்று சிறப்பு மிக்க சிட்டி வங்கியின் விளம்பர பலகை அகற்றப்பட்டது. குறிப்பிட்ட கட்டட விளம்பர பலகையில் இனி சிட்டி மற்றும் ஆக்சிஸ் இரண்டு வங்கிகளின் விளம்பரமும் இடம்பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருக்கும் சேவையை அப்படியே பயன்படுத்த உள்ளது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு ஆக்சிஸ் வங்கி தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது. இந்தியா உள்ளிட்ட 13 நாடுகளில் இருந்து சில்லறை வங்கி சேவைகளை சிட்டி வங்கி வரும் 1-ம் தேதியில் இருந்து தொடராது என்பது பல ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எதற்காக இந்த திடீர் மாற்றம் என்று புரியாமல் வாடிக்கையாளர்கள் சிலர்திகைத்துள்ளனர்.