உலக பொருளாதாரம் எப்படி இருக்கு ஒரு அலசல்!!!
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கடன்கள் மீதான வட்டிகளை அமெரிக்கா, யூரப் மட்டுமின்றி உலகின் பலநாடுகளும் கடுமையாக்கின.இதற்கு கைமேல் பலன் கிடைத்து வந்தது. இந்த சூழலில் அமெரிக்காவில் வட்டி விகிதம் சற்று குறைக்கப்பட்டதும் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் பல பொருட்களின் விலை ஏற்றம் என்பது 5.4% ஆக உயர்ந்துள்ளது.ஐரோப்பாவில் 5.3%ஆக உயர்ந்துள்ளது.இஸ்ரேல், நியூசிலாந்திலும் பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. அமெரிக்கா மட்டுமின்றி, ஐரோப்பாவிலும் உணவுப்பபொருட்கள் விலை கடுமையாக மீண்டும் உயர்ந்து வருகிறது.ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக பல நாடுகளிலும் எரிபொருள் சிக்கல் நிலவ இருக்கிறது. மெக்சிகோவிலும் விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது.ஆசியாவில் மலேசிய பணவீக்கம் தொடர்ந்து 2 வது மாதம் சரிந்துள்ளது.ஜப்பானிலும் கார் உற்பத்தியாளர்கள் சம்பள உயர்வு பற்றி பேசும் அளவுக்கு பொருளாதாரம் சற்று மீண்டு வருகிறது. உலகில் இஸ்ரேலில் நிதி கொள்கையை கடுமையாக்கப்பட்டுள்ளது.நியூசிலாந்தில் மத்திய வங்கி தனது வட்டியை அரை புள்ளி உயர்த்தியுள்ளது. தென்கொரியாவில் மீண்டும் கடன்களுக்கான வட்டிவிகிதம் கடுமையாக்கப்படுகிறது.நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கியில் நிதி கொள்கையில் சிறு தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன.