மக்களே!!! கடன் வாங்கியவர்கள் கவனத்திற்கு!!!!
இந்தியாவில் பெரும்பாலானோருக்கு கடன் என்பது இன்றி அமையாத ஒன்றாகும். இந்த நிலையில் கொடுத்த கடனை திரும்ப வாங்குவதும், அதனை சிலர் தராமல் டிமிக்கி கொடுத்து வருவதும் வங்கிகளுக்கும்,வாடிக்கையாளர்களுக்கும் உள்ள பல ஆண்டு சிக்கலாக உள்ளது. இந்த நிலையில் கொடுத்த கடனுக்கு வட்டியும், திரும்ப செலுத்தாத தொகைக்கு அபராத வட்டியும் விதிக்கும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது. இந்த சூழலில் கடனை வாங்கிவிட்டு அதனை திரும்ப செலுத்தாமல் உள்ளோருக்கு அபராத வட்டி என்ற முறைக்கு பதிலாக அபராத தொகை மட்டும் வசூலிக்கும் திட்டத்தை ரிசர்வ் வங்கி திட்டமிட்டு வருகிறது. வட்டிக்கு ஒரு வட்டி,அதற்கு ஒரு அபராத வட்டி என்பதை குறைக்கும் நோக்கில் அபராத தொகை மட்டுமே இனி வர அதிக வாய்ப்புள்ளது. வட்டியை ஒரு சில மாதங்கள் மட்டும் கட்ட முடியாத சிலருக்கு கடனில் சிறுசிறு மாற்றங்களை ரிசர்வ் வங்கி விதிமுறைகளை பின்பற்றி கடன் தரும் நிறுவனங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அபராதத் தொகை வசூலிப்பதில் சில நிறுவன குளறுபடிகளை தடுக்கவே இந்த புதிய வசதி அறிமுகமாக இருக்கிறது. இது தொடர்பான வரைவு அறிவுறுத்தல்கள் விரைவில் வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.