பாலூட்டி வளர்த்த கிளி!!! பழம் கொடுத்து பார்த்த கிளி!!!!
பார்த்துப்பார்த்து கட்டிய கண்ணாடி மாளிகையில் ஹிண்டன்பர்க் என்ற ஒற்றை கல் தாக்கி, மாளிகை சிதறிக்கிடப்பதாக அதானி குழுமம் புலம்பும் நிலை தான் தற்போது உள்ளது. துறைமுகம் முதல் மின்சாரம் வரை எல்லா துறைகளிலும் ஜாம்பவானாக வலம் வந்த அதானி குழுமத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 52 வார மிகக்குறைந்த விலையை எட்ட இருக்கிறது. கடந்த வாரம் இருந்த விலையை வாரத்தின் முதல் வர்த்தக நாளில் 12% குறைவான விலைக்கு அதானி குழும பங்குகள் விற்கப்படுகின்றன. கடந்த டிசம்பர் மாதத்தில் ஒரு பங்கின் விலை 4ஆயிரத்து189.55 ரூபாயாக இருந்த பங்குகள் கிட்டத்தட்ட 4-ல் 3 பங்குகள் சரிந்து விழுந்துள்ளன. Adani Green Energy, Adani Power, Adani Total Gas, Adani Transmission உள்ளிட்ட நிறுவன பங்குகளும் அதள பாதாளத்துக்கு சென்றுவிட்டன. Adani Wilmarமற்றும் NDTV ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் 5% சரிந்துள்ளன. ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் விலையும் 3முதல் 5விழுக்காடு சரிவை சந்தித்தன. தற்போதைய சூழலில் அதானி குழும பங்குகளை வாங்க வேண்டாம் என்பதே பங்குச்சந்தை நிபுணர்களின் கருத்தாக உள்ளது.