எனக்கு எண்டு கார்டே கிடையாதுடா!!!
90ஸ் கிட்ஸ்களின் பசுமையான நினைவுகளில் முதல் செல்போன்களாக வலம் வந்தவை நிச்சயம் நோக்கியாவாகத்தான் இருக்கும். அந்தளவுக்கு பிரபலமாக இருந்த நோக்கியா நிறுவனம் ஆண்டிராய்டு வந்ததும் இருந்த தடம் தெரியாமல் போனது. இந்த நிலையில் 60 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக நோக்கியா நிறுவனம் தனது லோகோவை மாற்ற அதிரடி திட்டங்களை களமிறக்கியுள்ளது. சந்தையில் விட்டதை பிடிக்கும் இடத்தை நோக்கி நோக்கியா டாப் கீரில் செல்ல அனைத்து பணிகளையும் செய்துள்ளது. நோக்கியா என்ற வார்த்தையை 5 வெவ்வேறு கோணங்களில் மாற்ற அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. நீல நிறத்தில் இருக்கும் பழமையான லோகோவை முழுமையாக கைவிட அந்த நிறுவனம் திட்டமிட்டு வெவ்வேறு வண்ணங்களை களமிறக்குகிறது. புதிய லோகோ பார்சிலோனாவில் நடக்கும் உலக மொபைல் காங்கிரஸில் அறிமுகப்படுத்த அதிக வாய்ப்புள்ளது . இந்த நிகழ்ச்சி வரும் 2-ம் தேதி நடைபெற இருக்கிறது. செல்போன்களில் விட்ட சந்தையை சிம்கார்டு நிறுவனங்களுக்கு உபகரணங்கள் வழங்குவதன் மூலம் பிடிக்க நோக்கியா தீவிரம் காட்டி வருகிறது. பொதுமக்களிடம் நேரடியாக பணம் பார்க்காமல் இனி பெரிய நிறுவனங்களுடன் கைகோர்க்க நோக்கியா பணிகளை செய்து வருகிறது. மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களுடன் இணைந்து நோக்கியா டேட்டா சென்டர்களை செய்கிறது. வட அமெரிக்காவில் பெரிய மாற்றத்தை நோக்கியா நிறுவனம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.