டாடாவிடம் பெரிய மீட்டர் போடப்பார்க்கும் பிஸ்லரி!!!
பிஸ்லரி என்ற தண்ணீர் பாட்டில் நிறுவனத்தை வாங்க பல பெரிய நிறுவனங்கள் போட்டி போட்டு முன்வந்த போதும், டாடா குழுமத்துக்கு விற்கவே பிஸ்லரி நிறுவனம் ஆர்வம் காட்டியது. இந்த நிலையில் இந்த இரு நிறுவனங்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 1 பில்லியன் டாலர் வேண்டும் என்று பிஸ்லரி நிறுவனம் கூறியதாகவும் அவ்வளவு தரமுடியாது என்று டாடா குழுமம் மறுத்துவிட்டதாகவும் வட்டாரங்கள் கூறுகின்றன. Shri Jayantilal Chauhan என்பவர் 1949ம் ஆண்டு துவங்கிய பிஸ்லரி நிறுவனம், 1969ம் ஆண்டு இத்தாலி நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இந்தியாவில் தற்போது 100 பேர் தண்ணீர் குடிப்பதாக எடுத்துக்கொண்டால் அதில் 60 பேர் குடிக்கும் தண்ணீர் பிஸ்லரியாகத்தான் இருக்கிறது. ஏற்கனவே டாடா பிளஸ் என்ற தண்ணீர் பாட்டில் நிறுவனத்தை நடத்தி வரும் டாடாவுக்கு பிஸ்லரியும் இணைந்தால் சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று டாடா குழுமம் நம்புகிறது.