இவருக்கு மட்டும் எப்படி இம்புட்டு கடன் கிடைக்குது…!!!
பல ஆண்டுகளாக பங்குச்சந்தையில் கைதேர்ந்தவராக வலம் வரும் கவுதம் அதானிக்கு ஹிண்டன்பர்க் அறிக்கை பேரிடியாக அமைந்துவிட்டது என்றால் அது மிகையல்ல. அதானி குழுமத்தின் பங்குகள் சரமாரியாக சரிந்து விழுந்துள்ள சூழலில் 3 பில்லியன் டாலர் கடனை soverign wealth fund -ல் இருந்து அதானி பெற்றுள்ளார். இந்த மாத இறுதிக்குள் பங்குச்சந்தைகளுக்கு வாங்கிய 690 மில்லியன் முதல் 790 மில்லியன் வரையிலான கடனை திரும்ப அடைக்க அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இருந்து முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் முயற்சியை அதானி குழுமம் முன்னெடுப்பதைப்போலவே சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கிலும் செய்யப்படுகிறது. ஜனவரி 24ம் தேதி ஹிண்டன்பர்க் நிறுவன அறிக்கை வெளியானதில் இருந்து அதானி நிறுவன பங்குகள் 140 பில்லியன் டாலர் சரிந்துள்ளது. இதுவரை தாங்கள் எந்த தவறையும் செய்யவில்லை என்று அதானி குழுமம் தொடர்ந்து மறுத்து வருகிறது.