வெட்டி செலவு செய்கிறார்களா இளைஞர்கள்?
கடன் இந்த வார்த்தை இல்லாமல் இந்தியாவில் யாராவது இருக்க முடியுமா என்றால் பெரும்பாலானோரின் பதில் இல்லை என்பதாகவே உள்ளது. கடந்த சில காலமாக கடன்வாங்குவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக மத்திய அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. இப்படி சொன்னால் சரியாக இருக்கும், அதாவது கடந்த 2018 செப்டம்பரில் இந்தியாவில் தனிநபர் கடன் வழங்கப்பட்ட தொகை 19.55லட்சம் கோடியாக இருந்தது. இது தற்போது, 35.98லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது 84% அதிகமாகும். கடன் வாங்கும் பெரும்பாலானோர் தங்களால் திரும்ப கட்ட முடியாத அளவுக்கு பெரிய தொகைகளை வாங்கிவிட்டு பின்னர் கட்டமுடியாமல் தவிப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இந்த வகையில் மக்களின் சிக்கலுக்கு தீர்வு கூற போதுமான ஆலோசகர்கள் இல்லாமல் உள்ளனர். இந்த சூழலில் அமெரிக்காவில் இருந்து வந்திருந்த ரித்தேஷ் ஸ்ரீவத்சவா இதனை தீர்க்க புதிய நிறுவனத்தையே ஆரம்பித்துள்ளார். freed என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ள அவர், கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்த முடியாத கடனாளிகளுக்கு இந்த நிறுவனம் ஆலோசனைகளை தருகிறது. இதன் மூலம் பலரும் மிக எளிமையான தவனைகள் வாயிலாக தங்கள் கடன்களை செலுத்திவிட்டு பெரிய கடனை திரும்ப செலுத்திவிட்டு தப்பித்தோம்,பிழைத்தோம் என உள்ளனர். இந்நிலையில் இளைஞர்கள் எந்த வகை பொருட்களில் அதிகம் செலவிடுகின்றனர் என்று அந்நிறுவனத்தின் ரித்தீஷ் அண்மையில் பேட்டியளித்துள்ளார். அதில் இளைஞர்கள் தேவையில்லாத பொருட்களுக்கு கடன் வாங்கிவிட்டு பின்னர் தவிப்பதாக கூறுகிறார். தேவைக்கும் ஆடம்பரத்துக்கும் உள்ள இடைவெளி குறித்து தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம் என்றும் ரித்தீஷ் கூறியுள்ளார். 20 அல்லது 30களில் உள்ளோர் முடிந்தவரை கடன்களை தவிர்ப்பது நலம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.