அட பாவமே சீனாவுக்கு வந்த சோதனைய பாருங்க…
சீனாவில் கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு காரணிகளால் 4 கோடியே 10 லட்சம் பேருக்கு வேலை பறிபோய் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. புளூம்பர்க் நிறுவனம் அண்மையில் சீனாவின் உழைக்கும் மக்களின் பங்களிப்பு மற்றும் அவர்களின் நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பெருந்தொற்று மற்றும் பல்வேறு காரணிகளால் சீனர்கள் வேலை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2019ம் ஆண்டு 774.7 மில்லியன் மக்கள் சுறுசுறுப்பாக பணியாற்றிக்கொண்டிருந்ததாகவும், 2022-ல் இந்த எண்ணிக்கை 733.5 மில்லியனாக சரிந்துள்ளது. கொரோனாவுக்கு பிறகு உழைக்கும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாகவும், நிறைய பேர் பணி ஓய்வு வயதை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஏற்பட்ட வேலைவாய்ப்பு இல்லாத நிலைதான் இதற்கு முக்கியகாரணம் என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இளம் வயதினர் குறைவாகவும், ஓய்வு பெறுவோர் வயதில் இருந்தோர் முன்கூட்டியே ஓய்வுபெற்றுவிட்டதாகவும் அரசு தரவுகள் தெரிவிக்கின்றது. கடந்த 40 ஆண்டுகளாக சீனாவில் ஓய்வு பெறுவோரின் வயதில் மாற்றம் கொண்டுவரப்படவில்லை என்றும்,இதனால் இருக்கும் பணியாளர்களின் செயல்திறன் வெகுவாக குறைந்து வருவதாகவும் மற்றொரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.