இந்தியாவில்தான் மாணிக்கம், அமெரிக்கா பிரிட்டன்ல இவரு பாட்ஷாவோ!!!!
ஹிண்டன்பர்க் அறிக்கையால் பொடிப்பொடியாக சிதறும் என்று பலரும் அதானி குழும பங்குகளை கணித்த நிலையில் கிடைத்த எல்லா பந்துகளையும் சிக்சர் அடிக்கும் முயற்சியில் அதானி குழுமம் இறங்கியுள்ளது இந்தியாவில் பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சியை கண்ட அதானி குழுமம் அண்மையில்தான் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூருக்கு சென்று முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்று வருகிறது. அவர்களும் பெருந்தொகையை முதலீடு செய்ய காத்திருக்கின்றனர். இந்த நிலையில் சரிந்த மதிப்பை தூக்கி நிறுத்தும் முயற்சியாக வரும் 7ம் தேதி முதல் 15ம் தேதி வரை துபாய், லண்டன் மற்றும் அமெரிக்காவில் முதலீட்டாளர்களை சந்தித்து பேச அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது. அமெரிக்க நிறுவனமான gqg அண்மையில் 1.87 பில்லியன் டாலர் மதிப்பில் முதலீடு செய்வதாக அறிவித்ததில் இருந்து அதானி குழுமத்தின் பெரும்பாலான பங்குகள் மீண்டும் விலையேற்றம் காணத் தொடங்கியுள்ளன. அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரியான ஜுகேஷிந்தர் சிங் இந்த முதலீட்டாளர்கள் சந்திப்பில் உடன் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நிறுவனத்தின் மிகப்பெரிய ஏற்றம் மற்றும் மிகக்கடுமையான தருணங்களிலும் இவர் உடன் இருந்துள்ளார். இவர் தலைமையில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது நிச்சயம் பெரிய முதலீடுகளை ஈர்க்கும் என்றும் அதானி நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹிண்டன்பர்க் அறிக்கையால் கிட்டத்தட்ட 135 பில்லியன் டாலர் பங்கு மதிப்பை அதானி குழுமம் இழந்துள்ள நிலையில் அமெரிக்காவின் நியூயார்க், துபாய் மற்றும் பிரிட்டன் பயணம் இந்தியா மட்டுமின்றி உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.