லோன் செயலிகளை சரிபார்க்கும் ரசிர்வ் வங்கி..!!
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சரான ராஜிவ் சந்திரசேகர் அண்மையில் நகிழ்ச்சி ஒன்றில் பேசினார். அதில் சட்டவிரோதமான செயலிகளை முறைபடுத்துவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்துள்ள இணையமைச்சர் கூகுள் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் சட்டவிரோதமாக இருக்கும் செயலிகளை சரிபார்க்கும் அம்சம் விரைவில் வர உள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகமும் ரிசர்வ் வங்கி அதிகாரிகளும் இணைந்து ஆலோசனை நடத்த இருப்பதாக கூறினார். லைசன்சிங் என்ற வரம்பில் வராமல், ரிசர்வ் வங்கி ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே குறிப்பிட்ட செயலி மூலம் கடன் தர முடியும் என்று கட்டுப்பாடுகள் விதிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அண்மையில் 138 பெட்டிங் செயலி,94 கடன் செயலிகளை அதிரடியாக நீக்கியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு,தேசிய இறையான்மைக்கு அச்சுறுத்தல்கள் இருக்க வாய்ப்புள்ளதாக கருதியதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அந்த அமைச்சர் தெரிவித்துள்ளார். நிதி நிறுவனங்களின் ஆதிக்கம் சாதாரண பொதுமக்களை பாதிக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய போட்டி ஆணையம் தற்போது நிறுவனங்களின் போட்டியை கண்காணித்து வருவதாகவும் இணையமைச்சர் கூறியுள்ளார்.