பேங்க் விற்பனைக்கு – 99 ரூபாய் மட்டுமே
அமெரிக்காவில் பிரபல வங்கியாக இருந்த சிலிக்கான் வேலி வங்கி அடுத்தடுத்து சரிவை சந்தித்து வருவதால் உலகளவில் அதிர்ச்சி காணப்படுகிறது.இந்த நிலையில் உ லகளவில் மிகப்பிரபலமான வங்கிகளில் ஒன்றாக இருக்கும் Hsbc வங்கி , பிரிட்டனில் உள்ள சிலிக்கான் வேலி வங்கிக்கிளையை வெறும் 1 பவுண்டுக்கு வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 99 ரூபாய் 13 பைசாவுக்கு சிலிக்கான் வேலியின் ஒரு கிளை அலுவலகத்தை எச்எஸ்பிசி வங்கி வாங்கியிருக்கிறது. ஒரே ஒரு பவுண்டுக்கு வாங்கப்பட்ட எஸ்விபி வங்கியை தங்கள் நிறுவனத்தில் இணைப்பது மகிழ்ச்சி அளிப்பதாக எச்.எஸ்பிசி வங்கி கூறியிருக்கிறது. குறிப்பிட்ட திவாலான வங்கியை பிரிட்டன் மத்திய வங்கி வெறும் 1 பவுண்டுக்கு விற்றது.இதனை பிரிட்டன் சான்சலரான ஜெரிமி ஹண்ட் உறுதி செய்துள்ளார். பிரிட்டனில் இயங்கி வரும் சிலிக்கான் வேலி வங்கிக்கிளை மொத்தம் 5.5பில்லியன் பவுண்டு கடனை வைத்துக்கொண்டுள்ளது.6.7பில்லியன் பவுண்டு அளவுக்கு முதலீடுகளை கொண்டுள்ளது. அமெரிக்காவில் திவாலான சிலிக்கான் வேலி வங்கி பிரிட்டனில் கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாமல் தாராளமாக பணப்புழக்கத்தை கொண்டுள்ளது. அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு இயங்கும் சிலிக்கான் வேலி வங்கி திவாலாகிவிட்டபோதும் அதில் முதலீடு செய்தவர்களின் தொகை நிச்சயம் திரும்ப அளிக்கப்படும் என்று அமெரிக்க அரசு அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இதனிடையே பிரிட்டனில் அமெரிக்க வங்கியான சிலிக்கான் வேலி வங்கி வெறும் 1 பவுண்டுக்கு விற்பனை செய்யப்பட்டது உலகளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.