புயெலன புறப்படும் டாடாவின் வளர்ச்சி..
விமானத்துறையில் முன்னணி நிறுவனமாக திகழும் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் இந்தியாவின் டாடா குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. அதன்படி டாடா குழுமத்தின் ஐதராபாத்தில் உள்ள ஆலையில் லாக்ஹீட் மார்ட்டின் போர் விமானங்களுக்கு இறக்கைகள் தயாரிக்கப்பட உள்ளது. 29 போர் விமானங்களுக்கான றெக்கைகள் 2025ம் ஆண்டுக்குள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2021 அக்டோபரில் டாடா செய்து கொடுத்த மாதிரிகள் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்துக்கு மிகவும் பிடித்துப்போனதால் அடுத்தகட்டமாக உற்பத்தியை அந்நிறுவனம் துவங்கியுள்ளது. லாக்ஹீட் மார்ட்டீன் நிறுவனம் தயாரிக்க இருக்கும் f-21ரக போர்விமானம், மூலம் 114புதிய போர்விமானங்கள் இந்திய விமானப் படைக்கு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இருநாட்டு கூட்டு நிறுவனத்தின் மூலம்(Tata Lockheed Martin Aerostructures Limited (TLMAL) ) இந்தியா அமெரிக்கா இடையேயான நல்லுறவு மேம்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 10 ஆண்டுக்கும் குறைவான காலகட்டத்தில் டாடா குழுமத்தின் tata advanced systems நிறுவனம் உலகளவில் மிகப்பெரிய உயரங்களை தொட்டிருக்கிறது. உலகத்தரத்தில் பொருட்களை செய்வதால் டாடா குழுமத்தின் அதிநவீன பிரிவு DRDO வுக்கும் பொருட்களை உற்பத்தி செய்யும் பங்காளராக மாறியுள்ளது.