டுபாகூர் வளர்ச்சிதான் இருக்கு…. பர்ஸை பதம் பார்த்துள்ள விலைவாசி.. விவரம் உள்ளே…
30 வருஷங்களுக்கு முன்பு இருந்த அளவுக்கு குறைவான சேமிப்புதான் மக்களிடம் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மக்களின் வாங்கும் திறன் குறைந்து,உற்பத்தி செலவு நிறுவனங்களுக்கு அதிகரிப்பது இதற்கு சிறந்த உதாரணமாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். விலைவாசி மற்றும் பனவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய ரிசர்வ் வங்கி பலவித முயற்சிகள் எடுத்துக் கொண்டு வந்தாலும் உண்மை நிலை என்ன என்று நுவாமா இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸ் என்ற அமைப்பு கொரோனாவுக்கு பிந்தய இந்திய பொருளாதார நிலை குறித்து ஆராய்ந்து அறிக்கை அளித்துள்ளது. அதில் இந்தியாவின் விலைவாசி உயர்வால் மக்களிடம் 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அளவுதான் சேமிப்பு உள்ளது என்று தெரிய வந்திருக்கிறது. இந்தியாவில் வாடிக்கையாளர் பணவீக்க விலை குறியீடான cpi ஜனவரியில் 6.5 ஆகவும், டிசம்பரில் 5.7விழுக்காடாகவும் இருந்தது. இந்தியாவில் மிகவும் அடித்தட்டு மக்கள் வசிக்கும்பகுதிகளிலும் கூட, எரிபொருள்,விலை மிகமிக அதிகமாக உள்ளதாக ஏழைகள் புலம்புகின்றனர்.இதனால் அவர்களிடம் இருந்த சேமிப்புகள் முழமையாக கரைந்துவிட்டது என்றும்,இது 30 ஆண்டுகளில் மிகவும் குறைந்த சேமிப்பை வைத்துக்கொள்ள முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கிராமபுறங்களில் நிலைமை சற்று சமாளிக்கும் வகையில் 5.3 என்ற அளவில் இருப்பதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது. விவசாய மக்களின் பணப்புழக்கமும் சற்று தொய்வாக உள்ளதாகவும், மக்கள் வாங்கும் சக்தி கடந்த 3 காலாண்டுகளாக சரிவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் கே வடிவிலான வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், களநிலவரம் சற்று கலவரமாகவே இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.