டிசிஎஸ் ஆபிசில் அப்படி என்னதான் நடக்குது?
இந்தியாவில் அதிக ஐடி பணியாளர்களை கொண்டுள்ள டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாாரியான ராஜேஷ் கோபிநாதன் பதவி விலகியுள்ளார். அவருக்கு பதிலாக புதிய சிஇஓவாக கீர்த்திவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக சிஇஓவாக இருந்த ராஜேஷ் திடீரென பதவி விலகியுள்ளது. அந்நிறுவன பணியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிலைமை சரியில்லாமல் இருக்கும் தருணத்தில் டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து அதன் சிஇஓ விலகியுள்ளதால் அடுத்த நிலையில் உள்ள பணியாளர்கள் ஒருவித கலக்கத்திலேயே இருக்கின்றனர். புதிய மற்றும் பழைய சிஇஓகள் இருவருமே தமிழ்நாட்டில் பொறியியல் பட்டம் படித்தவர்கள்தான் புதிய தலைமை செயல் அதிகாரியாக மார்ச் 16ம் தேதி முதல் கீர்த்திவாசன் பதவியேற்றுக் கொண்டுள்ளார். 1989ம் ஆண்டு டிசிஎஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த கீர்த்திவாசன் அடுத்தடுத்து பல தலைமை பதவிகளை அலங்கரித்துள்ளார். ராஜேஷின் திடீர் அறிவிப்பை அடுத்து அவசரமாக கூடிய நிர்வாகிகள் கூட்டத்தில் கீர்த்திவாசனை சிஇஓவாக நியமித்து அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. CEO பதவியில் இருந்து விலகிய ராஜேஷ் வரும் செப்டம்பர் மாதம் வரை டிசிஎஸ் நிறுவனத்தில் தனது பணிகளை கீர்த்திவாசனிடம் ஒப்படைத்துவிட்டு செல்வார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.