மூட் ஸ்விங் தான் போல இருக்கு!!!!
புதிதாக உறவில் இருக்கும் காதலன் காதலி போல இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருவதால் அடுத்த நொடி என்ன நடக்கும் என்றே கணிக்க முடியாத சூழல் இந்திய பங்குச்சந்தைகளில் காணப்படுகிறது. வாரத்தின் 2-வது வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 445 புள்ளிகள் உயர்ந்து 58ஆயிரத்து74 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது.இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 119 புள்ளிகள் உயர்ந்து 17 ஆயிரத்து107 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் 3%ஏற்றம் கண்டுள்ளன ஸ்டவ் கிராஃப்ட் என்ற நிறுவன பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் 10% ஏற்றம் கண்டன.வேலியண்ட் ஆர்கானிக்ஸ் என்ற நிறுவனமும் 10.25% விலை உயர்ந்தள்ளது. HDFClife,bajaj finance உள்ளிட்ட நிறுவன பங்குகள் தேசிய பங்குச்சந்தையில் ஏற்றம் கண்டன.பவர்கிரிட், இந்துஸ்தான் யுனிலிவிர், பிரிட்டானியா, டெக்மகேந்திரா,டிவிஸ் லேப் உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. தங்கம் மற்றும் வெள்ளி விலையில் பெரிய அளவில் மாற்றம் காணப்படவில்லை எனினும் மிக அதிகமான விலையிலேயே தங்கம் விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் சென்னையில் 5ஆயிரத்து 570 ரூபாயாகவும், ஒரு சவரன் 44 ஆயிரத்து 560 ரூபாயாகவும் , வெள்ளி ஒரு கிராம்10 பைசா உயர்ந்து 74 ரூபாய் 70 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி விலையும் ஒரு கிலோ ரூ.74ஆயிரத்து 700 ரூபாயாக உள்ளது. இந்த விலைதான் தங்கம் விற்பனையிலேயே இரண்டாவது அதிகபட்ச விலையாகும்.இங்கே கூறப்பட்டுள்ள விலையுடன் 3விழுக்காடு ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி சேதாரம் ஆகியன கடைகளில் கூடுதலாக வசூலிக்கப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.