11 லட்சம் கோடி ரூபாய் ஸ்வாஹா..!!!
அமெரிக்க வங்கிகள் திவாலானதில் இருந்து உலகளவில் பங்குச்சந்தைகளில் சரிவு தொடர்ந்து வருகிறது.வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்கிழமையும் வர்த்தகம் சரிவாகவே காணப்பட்டது.இந்த சரிவால் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்தவர்களுக்கு 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டது.இதுவரை மொத்தமாக 8 வேலை நாட்களில் 11 லட்சம் கோடி ரூபாய் இழப்பு நேர்ந்துள்ளது. பங்குச்சந்தையில் போடும் பணம் திரும்ப வருமோ வராதோ எனகலக்கத்தில் உள்ள முதலீட்டாளர்கள் இங்கிருந்த பணத்தை எல்லாம் எடுத்துக்கொண்டுபோய் அப்படியே தங்கத்தில் முதலீடு செய்துள்ளனர். இதன் விலைவாகவே அமெரிக்காவில் தங்கம் விலை ஒரு டிராய் தங்கம் 2 ஆயிரம் டாலர்களை கடந்துள்ளது. உலகோத்துறை பங்குகள் கடந்த 8 வேலைநாட்களில் கிட்டத்தட்ட 2%க்கும் அதிகமாக வீழ்ந்துவிட்டது. அமெரிக்க வங்கித்துறை மட்டுமின்றி கிரிடிட் சூய்சி நிறுவன பாதிப்புகளும் சந்தையில் பிரதிபலித்தது. அமெரிக்க பெடரல் ரிசர்வின் அடுத்தகட்ட நகர்வை வைத்தே அமெரிக்கா மட்டுமின்றி உலக பொருளாதாரமே மாற்றம் பெற இருக்கிறது. இந்த காரணிகளால் இந்திய சந்தையிலும் பெரிய தாக்கம் இருக்கும் என்பதும் நெல் முனை அளவும் சந்தேகம் வேண்டாம் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.