கிரிடிட் சூய்சி நிலை என்ன?…
அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கியைவிட பெரிய திவாலாகும் சூழலில் உள்ளது கிரிடிட் சூய்சி என்ற ஸ்விட்சர்லாந்து நிறுவனம், நம்மூர் அதானி நிறுவன முறைகேடு புகார் போலவே அமெரிக்காவில் இந்த நிறுவனம் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது. இதனால் கிரிடிட் சூய்சி நிறுவனத்தின் பங்குகள் திடீரென 4-ல் ஒரு பகுதி காணாமல் போய்விட்டது. மேலும் 17 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பத்திரங்கள் திவாலாகும் சூழலில் உள்ளது. இந்தநிலையில் குறிப்பிட்ட இந்த நிதி நிறுவனம் குறித்து இந்திய நிருணர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கோட்டக் மகேந்திரா வங்கியின் தலைமை செயல் அதிகாரியான உதய் கோட்டக் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில் ரிஸ்ட் ரிட்டன் என்பதை கவனத்தில் கொண்டு எந்த முதலீட்டையும் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அளவில் பெரியது என்பதால் ரிஸ்க் பற்றி அறியாமல் பணத்தை போடுவது ஆபத்து என்று கூறியுள்ள உதய் கோட்டக்,இது அனைத்து வங்கிகளுக்குமான ஒரு சிக்னல் என்றும் எச்சரித்தார். மிகப்பெரிய கடனில் சிக்கித்தவிக்கும் கிரிடிட் சூய்சி நிறுவனத்தையே மொத்தமாக 2 பில்லியன் டாலருக்கு வாங்க யூபிஎஸ் நிறுவனம் இசைவு தெரிவித்துள்ள இந்த சூழலில் உதய் கோட்டக்கின் கருத்துகள் முக்கியத்துவம் பெறுகிறது. அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ் வங்கி கடன்கள் மீதான வட்டி விகிதம் உயர்த்திக்கொண்டே சென்றால் ஏதோ ஒரு இடத்தில் விபத்து நடக்கும் என்று உதய் கோட்டக் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இதன்படியே பூஜ்ஜியத்தில் இருந்து 5 விழுக்காடு ஆக ஏறியுள்ளது.