தாத்தா கல்யாணம்.. கலாட்டா கல்யாணம்….
ஊடகத்துறையில் கொடிகட்டி பறக்க வயது ஒரு தடையில்லை என்று நிரூபித்துக்காட்டியுள்ளவர் 92 வயதாகும் ரூபர்ட் முர்டாக். வியாபாரத்தில் மட்டும் இல்லை சொந்த வாழ்க்கையிலும் கவுண்டமணி சொல்றாப்ல லவ்ஸ்க்கு வயது வித்தியாசம்லாம் தெரியாது என நிரூபித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த 66 வயதான முன்னாள் பெண்போலீஸ் Ann Lesley Smithஐ ரூபர்ட் கரம்பிடிக்க இருக்கிறார். 2008ம் ஆண்டு கணவனை இழந்த ஆனும் ரூபர்ட்டும் கடந்த செப்டம்பர் மாதம் சந்தித்துள்ளனர். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. அண்மையில்தான் தனது 4வது மனைவியை ரூபர்ட் விவாகரத்து செய்தார். இந்த நிலையில் ரூபர்ட்டுக்கும் ஆனுக்கும் வரும் கோடை காலத்தில் டும்டும்டும் நடக்கப் போகுதாம். பிரபல டிவிகளான டிஸ்கவரி, பாக்ஸ் நியூஸ், நியூயார்க் போஸ்ட் உள்ளிட்ட பத்திரிகைகளை ரூபர்ட் நடத்தி வருகிறார். ரூபர்ட்டின் இந்த திருமணம் அவருக்கு 5வது திருமணமாகும்.ஒரு கல்யாணத்துக்கு வழியில்லாமல் தவிக்கும் 90ஸ் கிட்சுக்கு இந்த செய்தி பேரிடியாக அமைந்துள்ளது.