வாரத்துக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் புஸ்க்…
ஹுரூன் குளோபல் ரிச் லிஸ்ட் என்ற பட்டியல் உலகளவில் இருக்கும் பணக்காரர்களின் சொத்து மதிப்புகள் குறித்து அலசி ஆராய்ந்து ஆய்வறிக்கையாக சமர்ப்பிக்கிறது. இந்த நிறுவனம் கவுதம் அதானியை பற்றி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கவுதம் அதானியின் சொத்துமதிப்பு வாரத்துக்கு ஒரு முறை 3 ஆயிரம் கோடி ரூபாய் குறைவதாக அதில் கூறப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் உலகின் 2-வது பெரும்பணக்காரர் என்ற இடத்தில் இருந்த கவுதம் அதானி,தற்போது 23வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இவை அனைத்துக்கும் அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க்கின் அறிக்கையே காரணமாக கூறப்படுகிறது. தற்போது அதானியின் சொத்துமதிப்பு வெறும் 53 பில்லியன் டாலராகவே உள்ளது. ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, தனது சொத்துமதிப்பை 82 பில்லியன் டாலராகவே வைத்துக்கொண்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த ஓராண்டில் அதானியின் சொத்துமதிப்பு 30% குறைவாகவும், அம்பானியின் சொத்துமதிப்பு 20மில்லியன் சொத்துகளையும் இழந்துள்ளனர். டி மார்ட் நிறுவனத்தின் உரிமையாளர் ராதாகிருஷ்ணன் தமானியின் சொத்துமதிப்பும் குறைந்துள்ளது. கோட்டக் மகேந்திரா வங்கியின் நிர்வாகியான உதய் கோட்டகும் சரிவை சந்தித்துள்ளார்.ஆனால் சைரஸ் பூனாவாலா மட்டும் 4% சொத்து உயர்ந்து 27 பில்லியன் சொத்துகளை வைத்துள்ளார். மொத்த உலக பணக்காரர்களின் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கிறது.