அடுத்த வருஷம் நல்ல சேதி வருமாம்…
அமெரிக்கா,இந்தியா என எந்த பாரபட்சமும் பார்க்காமல் விட்டு விளாசி வரும் பெரிய சிக்கல் யாதெனில் விலைவாசி உயர்வு மட்டுமே. இந்த பிரச்னையை தீர்க்க அனைத்து நாடுகளும் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர். இந்த சூழலில் மற்றொரு சிக்கலாக உள்ளது காலநிலை மாற்றம். பருவம் தவறி பெய்யும் மழை,வழக்கத்தை விட அதிகமான வெயில் என மாறி மாறி மக்களை வாட்டி எடுக்கும் இயற்கை சிக்கலின் பெயர் “எல் நினோ விளைவு” சில்லறை பணவீக்கத்துக்கும் அறிவியலுக்கும் என்ன தொடர்பு என நீங்கள் நினைக்கலாம், இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். எல் நினோ விளைவை சமாளித்துவிட்டால் 2023-24 நிதியாண்டில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 5.0 முதல் 5.6%க்கு உள் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவின் சில்லறை பணவீக்க அளவு 6.44% ஆக இருந்தது. இதே அளவு ஜனவரியில் 6.5% ஆகத்தான் இருந்தது. வழக்கமான பணவீக்கம் என்பது பருவநிலை சரியாக இருந்து, மழை சரியாக இருக்கும்பட்சத்தில் முதல் காலாண்டில் 5.0, 2-ம் காலாண்டில் 5.4, 3-வது காலாண்டில் 5.4%, 4 வது காலாண்டில் 5.6% ஆக இருக்கும் என்று சக்தி காந்ததாஸ் கூறியுள்ளார். எல் நீனோ விளைவால் மழை அளவு மிகக்குறைவாக பதிவாகும்பட்சத்தில் அது சில்லறை பணவீக்கத்தை பாதிக்கும் என்றும் ரிச்ரவ் வங்கி கூறியிருக்கிறது.